மொத்தப் பக்கக்காட்சிகள்

Follow by Email

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பிரகாஷ்: தமிழ்ப்பட வரலாறு

இந்தியாவில் திரைப்படம் :
தாமஸ் ஆல்வா எடிசன் " கினிடோஸ்கோப்" என்ற கருவியைக்கண்டுபிடித்ததின் மூலம் இன்று நாம் பார்க்கும் திரைப்படத்திருக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் பார்க்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த " லூமியர் சகோதரர்கள்" என்போர் 1895 இல் அறிமுகப்படுத்தினர். அவர்கள் எடுத்த ஒரு நிமிட திரைப்படங்களை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் திரையிட்டனர்.
*.இந்தியாவிற்கு வந்த முதல் திரைப்படம் ' இயேசுவின் வாழ்க்கையாகும் '. அது 1896 இல் பம்பாயில் திரையிடப்பட்டது.
*.இந்தியாவின் முதல் திரையரங்கான என்பில்ச்டன் கல்கத்தாவில் மதன் என்பவரால் 1907 இல் கட்டப்பட்டது.
*.இந்தியாவின் முதல் முழு நீளப்படம் ' ராஜா ஹரிச்சந்திரா ' .நீளம் 3700 அடி.
*.இந்தியாவில் தயாரான முதல் பேசும் படம் ' ஆலம் ஆரா '. 1931 மார்ச் 14 இல் திரையிடப்பட்டது.
*.தென்னிந்தியாவின் முதல் படம் ' கீசக வதம் ' 1916 இல் தயாரிக்கப்பட்டது .
*.தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ் ' .31.10.1931 இல் திரையிடப்பட்டது.
*.முதல் பேசும் படத்தை இயக்கியவர் 'H.M.ரெட்டி. T.P.ராஜலட்சுமி கதாநாயகி. இவர் 'மிஸ் கமலா ' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
*.1955 இல் வெளிவந்த ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' தமிழின் முதல் வண்ணப்படம்.
*.1948 இல் S.S.வாசன் 'சந்திரலேகா'என்ற படத்தை 609 பிரதிகள் எடுத்து உலகமெங்கும் திரையிட்டார்.அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அதிகபிரதிகள் எடுக்கப்பட்ட படம் இதுவே.
*.1954 இல் ' அந்த நாள் ' பாடல்களேஇல்லாத முதல் தமிழ்படம்.
*.தமிழ் திரைப்பட வரலாற்றில் மூன்று ஆண்டுகள் ஓடிய திரைப்படம் ஹரிதாஸ்.
*.தமிழ்நாட்டின் முதல் 70 MM திரையரங்கமான ஆனந்த் சென்னையில்G.உமாபதி என்பவரால் கட்டப்பட்டது.
*.முதல் சினிமாஸ்கோப் படம் ' ராஜா ராஜா சோழன்' .
*.1943 இல் அரிச்சந்திரா என்ற படத்தை A.V.M.செட்டியார் டப்பிங்செய்து தமிழின் முதல் டப்பிங் படத்திற்கு வழிவகுத்தார்.