மொத்தப் பக்கக்காட்சிகள்

Follow by Email

சனி, 21 ஏப்ரல், 2012

பிரகாஷ்: Autorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள்...

Autorun.inf கோப்புகள் என்றால் என்ன ?
இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில் உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்தகோப்பில்
எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )
இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.
[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
இது என்ன வைரஸா ?
நிச்சயமாக இல்லை. ஆனால் வைரஸ்கள்உங்களின் ஒவ்வொரு
டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவல் அடைகின்றன.
பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும்.இதனால் உங்கள்
கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது.இக்கோப்புகளை
சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.
இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் சிறப்புகள் ,
1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது .
2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.
Registry Disabled,
Task manager Disabled,
Enable Folders options
Enable run
Enable command prompt
மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)
தடுக்கிறது.
3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.
4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது
( Write -protect)
இப்பொழுது பல கணினிகளில் இந்த சிக்கல்களை நான் கண்டேன்.
இதற்குப்போய் Registry இல் மாற்றம் செய்வது , Gpedit.msc இல்
மாற்றம் செய்வது போன்ற சிக்கல் இல்லாமல் எளிய முறையில் எல்லாவற்றையும் நீக்குகிறது. தலை வலி இல்லாமல் இதனை
பயன்படுத்தி நீக்கி கணினியின் வேகத்தையும் கூட்டுங்கள் நண்பர்களே!
தரவிறக்கச்சுட்டி : ( வெறும் 625 KB தான் )http://www.technize.com/?dl_id=6