மொத்தப் பக்கக்காட்சிகள்

Follow by Email

சனி, 21 ஏப்ரல், 2012

பிரகாஷ்:உழவர் சந்தை விலை

உழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தின விலை நிலைமை இப்போது உங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்தியாக (SMS) வரும் வசதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள காய்கறி அல்லது தானியங்களின் பெயரை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால், தினமும் குறுஞ்செய்தியாக வரும்.
இந்த இணைய தளம் தமிழில் அமைக்க பட்டுள்ளது.
நான் இந்த தளத்தில் தக்காளி விலை கேட்டு பதிவு செய்து கொண்டேன். தினமும் மாலை நேரத்தில் வருகிறது.
இந்த தளத்தை உருவாகிய இந்தியா முன்னேற்ற நுழை வாயில் (India development gateway) நிறுவனத்திற்கு நன்றி
இணைய தளத்தின் முகவரி: http://services.indg.in/market_info/add_farmer_new_public_ta.php