மொத்தப் பக்கக்காட்சிகள்

Follow by Email

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பிரகாஷ்:அறிஞர்களின் பொன்மொழிகள் ஒரே இடத்தில்

ஆயிரக்கணக்கான அறிஞர்களின் பொன்மொழிகளை ஒரே இடத்தில் பெற ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும்இந்த பொன்மொழிகள். பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திரமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள். நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும். கூகுள் சிறந்த தேடியந்திரமாக இருந்தாலும் அந்த மொன்மொழிகளை மட்டும் தனியே பிரித்து தேடுவது சிரமம். அந்த சிரமத்தை போக்க வந்துள்ளது ஒரு புதிய தேடியந்திரம். இந்த தேடியந்திரத்தில் சென்று அறிஞர்பெயரையோ, சரியான keyword கொடுத்தால் போதும் எண்டர் கூட அழுத்த வேண்டியதில்லை அறிஞர்களின் பொன்மொழிகள் மட்டும் உங்களுக்கு தனியே பிரித்து காட்டும். இந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வார்த்தை கொடுத்து தேடினால் போதும் உங்களுக்கு அடுத்த நொடியில் பொன்மொழிகள் வந்துவிடும். ஒவ்வொரு பொன்மொழிக்கு அருகிலும்அந்த பொன்மொழியை சொன்ன அறிஞரின் பெயரும் இருக்கும். இது போன்று ஆயிரக்கணக்கான அறிஞரின் பொன்மொழிகளை இந்த தேடியந்திரம் நமக்கு தருகிறது. இந்த தளத்திற்கு செல்ல www.quotecoil.com