மொத்தப் பக்கக்காட்சிகள்

Follow by Email

புதன், 25 ஏப்ரல், 2012

ஜாவா ஸ்கிரிப்ட் அற்புதம் படங்களில்

ஏதாவது ஒரு GOOGLE IMAGE உள்ள பக்கத்தை எடுத்து கொள்ளுங்கள் .
அந்த பக்கத்துக்கு சென்று ADDRESS BAR-ல் கீழ் வரும் ஜாவா ஸ்கிரிப்ட் ஐ
PASTE & GO கொடுங்கள் .பிறகு நடப்பதை பாருங்கள் .அந்த பக்கத்தில்
உள்ளபடங்கள் எல்லாம் அந்த பக்கத்திலேயே பறக்க ஆரம்பிக்கும்
.javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24;
x4=300; y4=200; x5=300; y5=200;
DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function
A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i].style; DIS.position='absolute';
DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px";
DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5);
void(0);

மொபைலில் கோப்புகளை பூட்டி வையுங்கள்

மொபைல் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கைபேசியில் பல வகையான கோப்புகளை
வைத்திருப்பார்கள் . இப்படி வீடியோ , MP3, புகைப்படங்கள் , ஜாவா
மென்பொருள்கள் , ஜாவா கேம்ஸ் இன்னும் பிற கோப்புகளை பயன்படுத்த
வாய்ப்புண்டு . இது போன்ற நேரங்களில் அவர்கள் தங்களுகேன்று தனிப்பட்ட
கோப்புகளையும் வைத்திருப்பார்கள் .
அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என நினைபார்கள் .இப்படி பட்ட கைபேசியின்
கோப்புகளை பூட்டி வைப்பதற்கேன்று
ஒரு ஜாவா மென்பொருள் ஒன்று உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் அந்த
கோப்புகளை பூட்டி வைக்கலாம் கேலரி லாக்கர் என்னும் இந்த மென்பொருளை எந்த
வகையான கைபெசிக்கும்(ANY MOBILEDEVICE) பயன்படுத்திக் கொள்ளலாம்.
.
DOWNLOAD : கேலரி லாக்கர்
http://www.getjar.com/mobile/167801/gallery-locker-for-free-download/

புதிய மின்னஞ்சல்கள் வந்ததா என்று எஸ்.எம்.எஸ் -ஸில் அறிய

தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது . அது
போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்று நாம்
எப்படி அறிந்து கொள்ளலாம் . அதற்கு தான் இந்த தளம்நமக்கு உதவுகிறது .இது
ஒரு அருமையான தளம் . நமக்கு வரும் புதுபுது மின்னஞ்சல்களை நமக்கு
உடனடியாக தெரியப் படுத்துகிறது . இந்தியாவில் உள்ள அனைத்து
நெட்வொர்க்களுக்கும் இது நன்றாகசெயல் படுகிறது .
1.இந்த தளத்திற்கு சென்று http://www.site2sms.com/userregistration.asp
பெயர் ,பாலினம் ,மின்னஞ்சல்,தொழில் ,மாநிலம் ,மொபைல் நம்பர்,கடைசியாக
உங்கள் city name ஆகியவற்றை கொடுத்து பதிவுசெய்து கொள்ளுங்கள் .
பதிவு செய்து முடித்தவுடனே உங்கள் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும்
அதில் உங்கள் கடவு சொல் இருக்கும் .
அப்படி எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால் கீழே எண்ணுக்கு போன் செய்யவும் .
அல்லது கீழே உள்ள மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்
011-47606762 Or Mail us on support@site2sms.com
2.பின் டாஸ் போர்டு -க்கு செல்லுங்கள் . settings page - க்கு செல்லுங்கள் .
3.அந்த பக்கத்தில் எந்த கிழமை எந்த நேரம் எஸ்.எம்.எஸ். வர வேண்டும்
என்று கொடுத்து விடுங்கள் .
4. eg:123456789012@site2sms.com இப்படி ஒரு மின்னஞ்சல் கொடுப்பார்கள் .
5.அந்த மின்னஞ்சல் நம் மின்னஞ்சல் அமைப்புகளில் கொண்டுவந்து சில
மாற்றங்கள் செய்ய வேண்டும் .
login your mail-id : click settings - click " FORWARDING/POP/IMAP "
forward a copy of incoming mail-ID என்பதில் அந்த மின்னஞ்சலை
(123456789012@site2sms.com) கொடுக்கவும் .
உங்கள் மின்னஞ்சலுக்கு வந்த மெயில் -ஐ கன்பார்ம் செய்து கொள்ளுங்கள் .
இனி உங்களுக்கு புது மின்னஞ்சல்கள் உங்கள் மொபைலுக்கும் வரும் .
நன்றி ...

மொபைலில் கூகுள் பிளஸ்

கூகுள் நிறுவனமானது தன்னுடைய கூகுள் பிளஸ் சேவையை கைபேசி பயன்படுத்தி
வருபவர்களுக்கும் வழங்க உள்ளது .இது தற்போது சோதனையில் உள்ளது .இந்த
கூகுள் ப்ளஸ் சேவையானது மூலை முடுக்கெல்லாம் பரவும்
என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது .இந்த கூகுள் சேவையை மொபைல்
பயனாளிகள் அடைய சென்று பயன் பெறலாம் .http://m.google.com/plus

பேஸ் புக் மின்னஞ்சல் வேண்டுமா @ facebook.com

சில வருடங்களுக்கு முன் தொலைவில் உள்ள நம் உறவினர்கள்,நண்பர்கள்
பலகினவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொள்ள கடிதங்களை தான் பயன்படுத்துவோம்.
காலம் செல்ல செல்ல கடிதம் போக்குவரத்து குறைந்தது. தான் பின் தொலைபேசிகள்
,பிறகு கையடக்ககைபேசிகள் என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அறிவியல்
தன் எல்லை விரித்துக் கொண்டது .
நாடு விட்டு நாடு இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் , பிறகு அரட்டை , நேரடி
காணொளி அரட்டை என்று அதன் அகலம் பெரிதாகி கொண்டே சென்றது..செல்கிறது
...இன்னும் என்னவெல்லாம் தொழில்நுட்ப உலகில் நடக்க போகிறதோ தெரியவில்லை .
சரி மேட்டருக்கு வருவோம் ..முக நூல் அதாங்க பேஸ் புக் மின்னஞ்சல்
உருவாக்கலாம் எப்படி-ன்னு பாக்குறீங்களா சொல்லறேன்...
பேஸ் புக் இதுவரைக்கும் நீங்கள் நண்பர்களோடு இணையவும் , கருத்துகளை
தெரிவிக்கவும் தான் யூஸ் பண்ணிர்பிங்க இனி பேஸ் புக்-ல மெயில் ஐடி ஒபன்
பண்ணி அத உங்க நண்பர்கள் கிட்ட பகிர்ந்து கொள்ளுங்கள் .
முதல்ல இந்த கீழே இருக்கு பாருங்க அத கிளிக்-குங்க
facebook.com/about/messages/
அடுத்து Go To Messages அப்ப்டிங்குறத கிளிக் பண்ணுங்க
http://www.facebook.com/messages/ இந்த பக்கத்துக்கு போகும் .
மேல மூணு ஆப்சன் இருக்கும் . அது-ல முதல் ஆப்சன கிளிக் பண்ணுனா
உங்களுக்கு பேஸ் புக் மின்னஞ்சல் ரெடியாயிரும் .
உங்க பேஸ் புக் பயனர் பெயர் www.facebook.com/eppudi இப்படி இருந்துசுனா
eppudi@facebook.com- ன்னு மாறிடும் . இனி இந்த மின்னஞ்சல உங்கள்
நண்பர்களுக்கு சொல்லி ஒரு மின்னஞ்சல் (gmail,hot mail,yahoo mail to face
book)அனுப்ப சொல்லுங்க ...
அந்த செய்தி உங்கள் பேஸ்புக் பக்கத்துல வந்து இருக்கும்
உங்கள் மின்னஞ்சலை நிலையை அறிய இந்த பக்கத்துக்கு செல்லுங்கள் .
facebook.com/about/messages/

முன்னனுப்பு: Blogger Mobile Post

----------
எனது Nokia ஃபோன் மூலம் அனுப்பியது

------Original message------
From: <postgateway@blogger.com>
To: <prafkash@gmail.com>
Date: Wednesday, April 25, 2012 12:30:03 PM GMT+0000
Subject: Blogger Mobile Post

Success! Your பிரகாஷ்: ம... post made it to your blog
massprakash.blogspot....

பிரகாஷ்: மொபைல்களுக்கான மிக வேகமான பிரவுசர் UC Browser

மொபைல்களுக்கான மிக வேகமான பிரவுசர் UC Browser 8 இலவசமாக டவுன்லோட் செய்ய
மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக
உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும். இப்பொழுதுநாம்
பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும்
மொபைல் பிரவுசராகும். உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20
கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம்
கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை
அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில்
மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து
வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
*. இணைய பக்கங்களை 85% சுருக்கிவேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள
இதன் சிறந்த தொழில்நுட்பம்.
*. Multi Tabs வசதி.
*. மிகச்சிறந்த தேடியந்திரம்
*. மிகச்சிறந்த டவுன்லோட் மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம்
வேகமாக இருக்கும்.
*. மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே
கிளிக்கில் அந்ததளங்களுக்கு சென்று விடலாம்.
*. Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.
*. பிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப்
செய்ய வேண்டிய அவசியமில்லை.
*. இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்.
மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி
பயன்படுத்தப்படுகிறது. மொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய -
http://wap.ucweb.com/

இணையத் தொடர்பு இல்லாமல் போனில்பேஸ்புக்

போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக.
ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக
எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க.
இது இந்தியாவுக்கு மட்டும் இப்போது. முதலில் உங்கள் அலைபேசியில் இருந்து
*325# அல்லது (or *fbk#). இதற்கு உங்களிடம் இணையத் தொடர்பு தேவை இல்லை.
கட்டணம் ஒரு நாளைக்கு ஒருரூபாய் மட்டும்Facebook India ஆனது Fonetwish
உடன் இணைந்து இந்த வசதியை இந்தியர்களுக்கு வழங்குகிறது.
முதலில் உங்கள் User name, Password என்று வரிசையாக செல்லவேண்டும். இந்த
வசதி இப்போது ஏர்டெல், ஏர்செல்,ஐடியா, டோகோமோ நிறுவனப் பயனர்களுக்கு இது
கிடைக்கும்.
இதற்கு ஒரு நாளுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே போதும் என்று
சொல்லப்பட்டு உள்ளது. (தமிழன் இலவசமா எதிர் பார்ப்பான்னு தெரியல
விடுங்க). இதன் மூலம் எளிதில் சாட் செய்யலாம், உங்கள் செய்திகளை
பகிரலாம்.
இணையத் தொடர்பு இல்லாத நேரங்களில் இது பெறும் உதவி செய்யும். ஆபத்தான
நேரங்களில் கூட இது உதவலாம். மிக அருமையான வசதி. பயன்படுத்தி
பார்ப்போமே.http://www.massprakash.blogspot.com

நகைசுவை

மி ருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் "எவ்ளோ பெரிய பூனை"ன்னு.
& & & & & & &
கா தல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
^ ^ ^ ^ ^ ^ ^ ஜ னவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!
$ $ $ $ $ $ $ அ ம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு
சீக்கிரமா வந்துட்டே?
பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.
அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?
பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.

5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவை வெளியிட்டது

5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவை வெளியிட்டது கூகுள் சிறப்பம்சங்களை அறிய கடந்த இரண்டு வருடமாக கிளம்பிய புரளிகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது கூகுள் நிறுவனம். கடந்த பதிவில் இன்னும் ஓரிரு நாளில் கூகுள் டிரைவ் வருகிறது என் பார்த்தோம். அதன் படி அதிகாரபூர்வமாக கூகுள் டிரைவ் வசதியை அறிமுக படுத்தியது கூகுள். Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஆடியோ, PDF, Douments, Photos பைல்களை சேமித்து வைத்து எந்த இடத்தில இருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து பார்க்கும் வசதியை அளிப்பது தான் Google Drive. நாம் பார்ப்பது மட்டுமின்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். எதிர்பார்த்த மாதிரியே 5GB இலவசஇட வசதியுடன் வெளிவந்துள்ளது கூகுள் டிரைவ். அதற்க்கு அதிகமாகஇடவசதி வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகை (25GB for$2.49/month, 100GB for $4.99/month or even 1TB for $49.99/month) கட்டி பெற்று கொள்ளலாம். கூகுள் டிரைவ் சிறப்பம்சங்கள்: *. ஒவ்வொருவரும் 5GB இலவச இட வசதியை பெறலாம். *. தற்பொழுது Windows,Mac, Android இயங்கு தளங்களில் இருந்து உபயோகிக்கலாம். iPad மற்றும் iPhone இயங்கு தளங்களுக்கு விரைவில் வர இருக்கிறது. *. இதற்க்கு முன்னர் இருந்த கூகுள் டாக்ஸ் வசதி இப்பொழுது கூகுள் டிரைவில் இணைந்து விட்டது. ஆகவே ஆன்லைனில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கூகுள்டாக்ஸ் உபயோகிக்க முடியும். *. கூகுள் டிரைவ் தற்பொழுது போட்டோஷாப்(PSD) பைல்கள் உட்பட 30 க்கும் அதிகமான பைல்வகைகளை சப்போர்ட் செய்கிறது. *. கூகுள் டிரைவில் சேமித்து உள்ளபைல்களை குறிப்பட்ட குறிச்சொல் கொடுத்தோ அல்லது பைல்வகையை கொடுத்தோ தேடும் வசதி உள்ளது. *. கூகுள் டிரைவில் டீபால்டாக OCRதொழில்நுட்பம் இணைந்துள்ளதால்ஏதாவது ஒரு ஸ்கேன் பைலை அப்லோட் செய்தால் அதில் இருந்து எழுத்துக்களை மட்டும் தனியே பிரித்து எடுக்க முடியும். *. கூகுள் டிரைவில் உள்ள போட்டோக்களை நேரடியாக கூகுள் பிளசில் பகிரும் வசதியும் உள்ளது மற்றும் விரைவில் கூகுள் டிரைவ் பைல்களை நேரடியாக ஜிமெயிலில் அட்டாச் செய்யும் வசதியும் வர இருக்கிறது. *. இது மட்டுமின்றி சில மூன்றாம் தரப்பு மென்பொருள்களின் உதவியுடன் fax அனுப்பும் வசதி, வீடியோக்களை எடிட் செய்யும் வசதிகளை விரைவில் தர இருக்கிறது. கூகுள் டிரைவ் பற்றி சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள். கூகுள் டிரைவ் வசதியை பெற: எப்பவும் போல இந்த வசதி அனைவருக்கும் இல்லை. நான் முயற்சி செய்தேன் கிடைக்க வில்லை. இந்த லிங்கில்http://drive.google.com/startசென்று நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்த வசதி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அதில் உள்ள Notify பட்டனை அழுத்தி விட்டால் போதும் உங்களுக்கு இந்தவசதி தயாரானவுடன் உங்களுடைய மெயிலுக்கு செய்தி அனுப்பி விடுவார்கள். பிறகு நீங்கள் கூகுள் டிரைவ் வசதியை உபயோகித்து கொள்ளலாம். இவ்வளவு வசதிகளை கொடுத்ததும் கடைசியில் கூலாக இது ஆரம்பம் மட்டும் தான் என்று கூறுகிறது கூகுள் நிறுவனம். அப்படியென்றால் இன்னும் ஏராளமானவசதிகளை வாசகர்களுக்கு வழங்க இருக்கிறது கூகுள் டிரைவ். இந்த வசதி உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என கீழே கமெண்டில் சொல்லுங்கள். இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

பேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்பது எப்படி

உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரே சமூக இணையதளம் பேஸ்புக் ஆகும். சமூக இனியதலங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பேஸ்புக் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளது. பேஸ்புக் உச்சத்தில் இருந்தாலும் அதன் வாசகர்களை கவர அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. அந்த வகையில் இப்பொழுது பேஸ்புக்கில் Interest என்ற புதியவசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
Interest வசதியை பயன்படுத்துவது எப்படி:
பேஸ்புக்கில் நிறைய நபர்களிடம் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில பேர் பகிர்வது உங்களுக்கு மிகவும் பிடித்து பிடித்து இருக்கும். அப்படி உங்களுக்கு பிடித்த நபர்களின் பகிர்வுகளை மட்டும் தனியாக பார்க்க உதவுவது தான் இந்த interest வசதி.
*. முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் இடது பக்கத்தில் கீழ் பகுதியில் Interest என்ற புதிய வசதி இருப்பதை காண்பீர்கள் அதன் மீது க்ளிக் செய்யவும்.
*. அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் CREATE LIST என்ற பட்டனை அழுத்தவும்.
*. அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் பின்தொடரும் பக்கங்கள், நண்பர்கள், Subscribe செய்யும் பட்டியல் இருக்கும் காணப்படும்.
*. அதில் உங்களுக்கு பிடித்த நபர்களை மட்டும் தேர்வு செய்துகொள்ளவும்.
*. உங்களுக்கு பிடித்த நண்பர்களை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
*. அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கொடுத்து உங்கள் பட்டியல் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளவும்.
*. அடுத்து கீழே உள்ள Done என்பதைக்ளிக் செய்தால் போதும் தேர்வுசெய்தவர்களின் பதிவுகள் மட்டும் இனி தனியாக பார்த்து கொள்ளலாம்.
இதே போன்று தொழில்நுட்பம், அரசியல், அனுபவம் இப்படி உங்களுக்கு பிடித்த நண்பர்களை தனியாக பட்டியலிட்டு கொள்ளலாம்.
இந்த வசதி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

பிளாக்கின் பதிவுகள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக

பிளாக்கின் பதிவுகள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக தங்களின் பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை தாங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் இருக்கும் இடங்களில் தங்களின் பிளாக் மற்றும் பதிவுகளை தெரிவுபடுத்துவீர்கள். தங்களின் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் தங்களின் பதிவுகளை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பதிய மறக்க மாட்டீர்கள். அறம்பத்தில் இதனை தாங்கள் தவறாமல் மேற்கொண்டாலும், சிறிது நாட்களின் தங்களுக்கு போதிய நேரம்யின்மை காரணத்தால், இந்த செயலை மேற்கொள்ள தவறியிருப்பிர்கள். இந்த குறையை போக்க தான், இந்த அருமையான பதிவு. தங்களின் பிளாக்கில் பதிவுகளை இட்ட அடுத்த நிமிடமே தங்களின் பதிவுகள் முதன்மை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆனால் ஏப்படி இருக்கும். இந்த அருமையான சேவையை Twitter Feed என்னும் வலைதளம் வழங்குகிறது. Twitter Feed முதலில் மேலே உள்ள லிங்கை கிளிக்செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் அங்கு தங்களின் இமெயில் முகவரியை தந்து தங்களை அங்கு உறுபினராக ஆக்கி கொள்ளுங்கள். பின்னர், தோன்றும் திரையில் CREATE A FEED என்பதனை கிளிக் செய்யவும். FEED NAME என்பதில் தங்களின் பிளாக் பெயரையும் BLOG URL என்பதில் தங்களின் பிளாக் முகவரியை இடவும். பின்னர் அடுத்தஸ்டெப்பிற்கு செல்லவும். அதில் எந்த சமூக தளத்தில் தங்களின் பதிவுகளை பிரசுரம் ஆகா வேண்டும் என தேர்வு செய்யவும். அவ்வளவு தான் இனி தங்களின் பிளாக்கின் பதிவுகள் தானாக பிரசுரம் ஆகும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில். நன்றி! கருத்துகளை வரவேற்கிறேன்.http://twitterfeed.com/users/new

சனி, 21 ஏப்ரல், 2012

பிரகாஷ்: ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து இருக்கும் இடத்தை ...

ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில்
எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சில
நிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தை
கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த நபர் நமக்கு சமீபத்தில்
அனுப்பிய இமெயில் முகவரியை திறந்தது அதில் இருக்கும்
Show Original என்பதை தேர்ந்தெடுத்து அதில் உள்ள Sender ip
என்பதை Copy செய்து கொள்ளவும். இந்த IP முகவரியை
இந்த இணையதளத்தில் சென்று கொடுத்தால் போதும் உடனடியாக
கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://www.yougetsignal.com/tools/visual-tracert/
இந்த தளத்திற்கு சென்று நாம் Copy செய்து வைத்திருக்கும்
IP முகவரியை கொடுக்கவும் சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக
கூகுள் மேப்பிலே அனுப்பியவரின் இடத்தை காண்பிக்கும்.
சில நிறுவனங்கள் இதை வைத்துக்கொண்டு தான் இமெயில்
முகவ்ரியை மட்டும் கொடுங்கள் இருக்கும் இடத்தை சொல்கிறோம்
என்கிறது.இது எப்படி சாத்தியம் என்றால் சில இணையதளங்களில்
சென்று நாம் ஒரு இமெயில் முகவரியை கொடுத்தால் கடைசியாக
அவர் ஆக்சஸ் செய்த IP முகவரியை எளிதாக எடுத்துக்கொடுக்கும்
உடனடியாக இவர்கள் அந்த முகவரியைஇங்கு கொடுத்து
இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர்.உதாரணமாக நாம் நம்
நண்பர் ஒருவர் அனுப்பிய IP முகவரியை கொடுத்துப் பார்த்தோம்
சரியாக இருக்கும் இடத்தை காட்டியது. கண்டிப்பாக இந்ததளம்
நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பிரகாஷ்:SMS பார்க்க காசு

SMS பார்க்க காசு
வேலையில்லை, ஆனால் பணம் உண்டு.
இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்என்று பல பணிகளை செய்து நீங்கள் அலுத்துப் போய் இருக்கலாம். ஆனால், படுகை வழங்கும் பணிகளை செய்தால் கண்டிப்பாக பண வரவு உண்டு. ஏனெனில், அனைத்துப் பணி பதிவுகளும் இருமுறை பணவரவு பெற்ற பின்னரே உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் நாம் இன்று பார்க்கப் போவது Mginger (விளம்பர SMS பார்க்க காசு).
Mginger , நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் சந்தாதாரர்களை குறிவைத்து தொடங்கப்பட்ட வெற்றிகரமான விளம்பர நிறுவனம். இவ்விணையதளம் 2007 ஆம் ஆண்டில் Chaitanya Nallan என்பவரால் உருவாக்கப்பட்டது.
Mginger -ல் நமது மொபைல் எண்ணை இணைத்து சேர்வதன் மூலம் நான்கு முக்கிய பயன்களை பெறலாம். அவை,
1. நமக்கு வரும் SMS-க்கு காசு மற்றும் நாம் சேர்த்துவிடும் நண்பர்க்கு கிடைக்கும் SMS மூலமாகவும் காசு.
அவர்கள் நமக்கு நம் அருகில் உள்ளசிட்டியில் என்ன புதிய ஆப்பர் (குறைந்த விலை) மற்றும் புதியதாகஅறிமுகப்படுத்தப்படும் பாலிஸி(LIC) போன்ற விளம்பரத்தையே SMS-ஆக அனுப்புகின்றனர்.(நாம் சொல்லும் நேரத்தில் மட்டுமே விளம்பரம் வரும். அதாவது எனக்கு இரவு 6-8 மணி வரைக்கும் தான் SMS அனுப்ப வேண்டும் என்று தேர்வு செய்துள்ளதால் அந்நேரம் மட்டுமே, Mginger அனுப்பும் SMS வரும். மற்ற நேரத்தில் எந்த தொந்தரவும் இருக்காது.)
2. இலவசமாக பிற நண்பர்களுக்கு SMS அனுப்ப முடியும்.
3. இலவசமாக விடியோ கேம்ஸ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
4. அருகில் உள்ள பெரிய கடைகளில் டிஸ்கவுண்ட்களை Mginger Coupon கொண்டு பெற முடியும்.
Mginger மூலம் பணம் சம்பாதிக்க:
நமக்கு வரும் ” எஸ்.எம்.எஸ் ” மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும், ஆனால் உண்மை.MGinger-ல் சேர்ந்து பணம் சம்பாதிப்பது எப்படி?
முதலில் நான் கீழே கொடுத்துள்ள, ம்ஜிஞ்சர் லிங் மூலம் தங்களது பெயரை பதிவு செய்யுங்கள். கண்டிப்பாக, உங்களது சரியான கைப்பேசி எண்ணை கொடுக்கவும்.
Mginger-ல் பதிவு செய்ய > :s_blush:s_blush
http://mginger.com/signup.html?inviteId=1767562 கிளிக்
ரூபாய் 3/=
நீங்கள் பதிவு செய்ததும், உங்களது மொபைல் எண்ணுக்கு ஒர் ”SMS” வரும். அதன்படி கொடுத்துள்ள எண்ணுக்கு Reply SMSஅனுப்புவதன் மூலம் உங்களது MGinger கணக்கு Activate செய்யப்படுவதுடன், உங்களது கணக்கில் ரூபாய் 3/- சேர்க்கப்படும்.
ரூபாய் 1/=
அதே நேரத்தில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும் ஒர் Activation Link - Mginger-ல் இருந்து வந்திருக்கும். அதையும் ஒர் கிளிக் செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை சரி பார்த்து அக்டிவேட் கிளிக் செய்ததும் உங்களது கணக்கில் ரூபாய் 1/- சேர்க்கப்படும்.
காசு 20 - காசு 10 - காசு 05
பதிவு செய்த மொபைல் எண்ணை Reply SMS மூலம் உங்களது அக்டிவேட் செய்தது முதல் உங்களது மொபைல் எண்ணுக்கு MGinger தனது விளம்பர குறுந்தகவலை உங்களுக்கு அனுப்ப ஆரம்பிக்கும். அப்படி உங்களது மொபைலுக்கு வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்-க்கும் காசு 20 கணக்கில் சேர்க்கப்படும்.
மேலும், நீங்கள் சேர்த்துவிடும் நண்பர்க்கு வரும் SMS-மூலம் உங்களுக்கு காசு 10-ம், நண்பரின்நண்பர் மொபைலுக்கு வரும் SMS மூலம் காசு -5 ம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.
ரூபாய் 2/=
MGinger-ல் உங்களது நண்பர்களை ரெபரல் லிங் மூலம் சேர்த்துவிடுவதன் மூலம், தலா நண்பர்க்கு ரூபாய் 2/- வீதம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.
எவ்வாறு நண்பர்களை ரெபர் (Refer) செய்வது?
புதிய நண்பர்களை Mginger-l சேர்த்துவிட , Mginger தளத்தில் லாக்கின் செய்ததும் HOME > பக்கத்தின் நடுவிலேயே உங்களுக்கான Referral Link கொடுக்கப்பட்டிருக்கும்.(விவரம்கிழ் படம் பார்க்கவும்) அதில் ஏதேனும் ஒன்றை எடுத்து உங்களது படுகை.காம் கையொப்பப் பகுதியில் இணைத்துக் கொண்டால் போதுமானது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் வலைத் தளங்களிலும் ரெபரல் லிங்கை கொடுத்தால் பிற நண்பர் உங்களுக்கு கிழ் சேர வாய்ப்பாக அமையும்.
அவ்ளதான், உங்களது பணி முடிந்தது... பின்னர், யவரேனும் உங்களது Signature இடத்தில் அமைந்துள்ள Mginger Referral Link-ஐ உபயோகப்படுத்தி சேரும் பொழுது ரூபாய் இரண்டும், வரும் SMS-மூலம் 20-10-5 காசுக்கள் என உங்களது கணக்கில் சேர்க்கப்படும். கணக்கில் ரூபாய் 300 சேர்ந்தவுடன் "Pay me" பட்டனை அழுத்தி பே ரெகியுஸ்ட் செய்தால் அடுத்த 10 நாட்களில் உங்கள் வீடு தேடி காசோலை வரும்.
வெகு குறைந்த காசாக இருக்கிறது என்று பார்க்காதீர்கள் . ” சிறு துளிதான் பெரு வெள்ளம் ” ஆகையால், நான்கொடுக்கும் ஒவ்வொரு பணிகளிலும் சேர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம். சம்பாதிக்க, இன்னும் பலபணிகள் கொடுக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

பிரகாஷ்:உழவர் சந்தை விலை

உழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தின விலை நிலைமை இப்போது உங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்தியாக (SMS) வரும் வசதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள காய்கறி அல்லது தானியங்களின் பெயரை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால், தினமும் குறுஞ்செய்தியாக வரும்.
இந்த இணைய தளம் தமிழில் அமைக்க பட்டுள்ளது.
நான் இந்த தளத்தில் தக்காளி விலை கேட்டு பதிவு செய்து கொண்டேன். தினமும் மாலை நேரத்தில் வருகிறது.
இந்த தளத்தை உருவாகிய இந்தியா முன்னேற்ற நுழை வாயில் (India development gateway) நிறுவனத்திற்கு நன்றி
இணைய தளத்தின் முகவரி: http://services.indg.in/market_info/add_farmer_new_public_ta.php

பிரகாஷ்: அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
யாரையாவது கிண்டல் செய்யவோ, சும்மா பயமுறுத்தவோ நாம் தெரியாத எண்னில் இருந்து SMS செய்வோம். இதற்க்காக தனியாக SIM CARD வாங்க வேண்டும். ஆனால் இப்போது சில WEB SITEகள் நமக்கு அந்த வசதியை தருகின்றது.
இவற்றை விளையாட்டிர்க்கு மட்டுமே பயன்படுத்துங்கள், பிரச்சனையில் மாட்டிகொள்ளாதீர்கள்.
1. வேறு எண்ணில் இருந்து அனுப்ப.
1. முதலில் http://smsmafia.in என்றதளத்திற்க்கு செல்லவும்.
2. அதில் TARGET 10-DIGIT MOBILE NO. என்ற TEXT BOX ல் யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர் எண்ணை அளிக்கவும்.
3. பின்பு MESSAGE என்ற ல் உங்கள் MESSAGE ஐ டைப்பண்னவும்.
4. கிழே உள்ள SEND SMS என்ற பட்டனை அழுத்தவும்.
5. உங்கள் நீங்கள் அளித்த எண்ணிற்க்கு சென்றிருக்கும்.
2. வேறு பெயரில் அனுப்ப.
1. முதலில் http://smsmafia.in/sid என்ற தளத்திற்க்கு செல்லவும்.
2. அதில் TARGET 10-DIGIT MOBILE NO. என்ற TEXT BOX ல் யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர் எண்ணை அளிக்கவும்.
3. பின்பு MESSAGE என்ற ல் உங்கள் MESSAGE ஐ டைப்பண்னவும்.
4. கிழே உள்ள SEND SMS என்ற பட்டனை அழுத்தவும்.
5. உங்கள் நீங்கள் அளித்த எண்ணிற்க்கு சென்றிருக்கும்.

பிரகாஷ்:Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

கைத்தொலைபேசிகளில் Memory Card ஆனது தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய External Storage ஆக செயற்படுகிறது. பெரும்பாலானவர்கள் MP3 பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைப்பதற்குபயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் தனிப்பட்ட தகவல்கள், Contacts, Message போன்றவற்றை இரகசியமாக சேமித்து வைத்திருப்பார்கள்.
அவ்வாறு இரகசியமான தகவல்களை சேமித்து வைத்திருக்கும்போது Memory Card இற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். பாஸ்வேட் மறக்காதிருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அத்தனை தகவல்களையும் இழக்கவேண்டியதுதான். Memory Card இற்கு பாஸ்வேட் பாதுகாப்பு கொடுத்தால் தொலைபேசியை கணினியுடன் இணைத்தால் கூட Memory Card இனை Windows Explorer காண்பிக்காது. இருக்கும் ஒரேயொரு வழி Memory Card ஐ Format செய்வதுதான். இதனால் சேமித்து வைத்திருக்கும்அத்தனை தகவல்களும் பறிபோய்விடும்.
சரி.. Format செய்யாமல் memory card ஐ Unlock செய்யமுடியாதா? முடியும். அதற்கு உதவி செய்கிறதுFExplorer என்ற இலவச மென்பொருள்.
*. இந்த இணைப்பில் சென்று தரவிறக்கி தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள் FExplorer
*. அதன் பின்னர் FExplorer ஐ Open செய்து C: ட்றைவினுள் செல்லுங்கள்
*. C: System செல்லுங்கள்
*. அங்கே mmcstore எனும் பெயரில் உள்ள File ஐ உங்கள் கணினிக்கு காப்பி செய்துகொள்ளுங்கள்
*. காப்பி செய்ததும் Notepad உடன்Open செய்யுங்கள்
*. இப்போது அதில் நீங்கள் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை காணலாம்.http://handheld.softpedia.com/get/System-Utilities/Enhancements/FExplorer-7925.shtml

பிரகாஷ்: Autorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள்...

Autorun.inf கோப்புகள் என்றால் என்ன ?
இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில் உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்தகோப்பில்
எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )
இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.
[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
இது என்ன வைரஸா ?
நிச்சயமாக இல்லை. ஆனால் வைரஸ்கள்உங்களின் ஒவ்வொரு
டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவல் அடைகின்றன.
பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும்.இதனால் உங்கள்
கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது.இக்கோப்புகளை
சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.
இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் சிறப்புகள் ,
1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது .
2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.
Registry Disabled,
Task manager Disabled,
Enable Folders options
Enable run
Enable command prompt
மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)
தடுக்கிறது.
3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.
4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது
( Write -protect)
இப்பொழுது பல கணினிகளில் இந்த சிக்கல்களை நான் கண்டேன்.
இதற்குப்போய் Registry இல் மாற்றம் செய்வது , Gpedit.msc இல்
மாற்றம் செய்வது போன்ற சிக்கல் இல்லாமல் எளிய முறையில் எல்லாவற்றையும் நீக்குகிறது. தலை வலி இல்லாமல் இதனை
பயன்படுத்தி நீக்கி கணினியின் வேகத்தையும் கூட்டுங்கள் நண்பர்களே!
தரவிறக்கச்சுட்டி : ( வெறும் 625 KB தான் )http://www.technize.com/?dl_id=6

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பிரகாஷ்:உங்கள் ANTIVIRUS வேலை செய்யுதா நீங்களே சோதனைசெய்யுங்கள்

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.
இணையம் மற்றும் சாதாரணமாக கணினிஉபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus).நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும்.நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code( நீல
நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் .

பிரகாஷ்: கைப்பேசியில் திருட்டு

கைப்பேசியில் திருட்டு
தேவையற்ற நேரத்தில் உங்கள் கைப்பேசியில் ப்லுடூத் ஐ நிறுத்தி வையுங்கள். நீங்கள் உங்கள் கைப்பேசியில் இந்த மென்பொருளை பதிவிறக்கி மெமரி கார்ட் மூலம் உங்கள் கைப்பேசிக்கு கொண்டுவந்து, அதை கைப்பேசியில் மெமரி கார்டில் எந்த பகுதியில் பதிந்தோமோ அந்த இடத்திற்க்கு சென்று இயக்குங்கள் கீழே உள்ள படம் போன்று மென்பொறுள் திறக்கும்
அதில் ப்லுடூத் ஆன் செய்து செர்ச் செய்தீர்கள் ஆனால், பக்கத்தில் உள்ள எந்த கைப்பேசியில் ப்லுடூத் ஆன்ஆகியிருந்தாலும் அதை காட்டும், இப்போது நீங்கள் எளிதாக அந்த கைப்பேசியில் உள்ள எஸ் எம் எஸ், போன்புக்கில் உள்ள அனைத்து எண்களையும், மற்றும் ஸ்டில்ஸ், கால் லாக் ஆகியவைகளை நீங்கள் எளிதாக அவர்களுக்கு தெரியாமல் அதனை எடுத்து விடலாம்
பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக்செய்யவும்http://www.brothersoft.com/mobile/super-bluetooth-hack-download-135.html

பிரகாஷ்:மொபைல் ஃபோன்

மொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது உண்டு. அதில் நமக்கு அடிக்கடி தேவைப்படுவது Dictionary ஆகும். இங்கு நான் ஒரு English to English Dictionary க்கான லிங்க் தருகிறேன். நம் போன்க்கு தமிழ் மொழிக்கான dictionary கிடைப்பது அரிது. அத்துடன் கிடைத்தாலும் அதிக வார்த்தைகள் இருக்குமா எனத் தெரியவில்லை. இந்நிலையில் ஒரு நல்ல English to English Dictionaryகிடைத்தால் நல்லதுதானே. மிக எளிமையான ஆங்கிலத்தில்"MSdict Viewer" என்ற பெயரில் உள்ள இது Oxford English Dictionary ஆகும். இது உங்கள் வார்த்தைக்கு சரியான பொருளை ஆங்கிலத்திலயே தரும். அத்துடன் அந்த வார்த்தை Noun, verb என்று சொல்லி அந்த வார்த்தை தொடர்புடைய மற்ற வார்த்தைகளையும் தந்து விடுகிறது. இதன் சிறப்பம்சம்கள்: --> Offline இல் பார்க்கும் வசதி --> எளிமையான பொருள் விளக்கம் --> வார்த்தைக்கு சம்பந்தம் உள்ள வார்த்தைகளையும் சேர்த்து தருவது. ---> மிக அதிக வார்த்தைகளை கொண்டுள்ளது. --> மிக குறைந்த சைஸ் - 801.87 kb இது jar file ஆகும். உங்கள் போனுக்கு சப்போர்ட் ஆனால் இதை download செய்து உங்கள் memory card இல் copy செய்து கொள்ளவும்.தனியாக இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. அதற்கான லிங்க்: http://www.ziddu.com/download/15050836/oxford-min_iyam89ws.jar.html

பிரகாஷ்: உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா….?

கவனக் குறைவாகத் மொபைல் தொலைத்து விட்டீர்களா…?
இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமானஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.
இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.
இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.
இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-
பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்தஎண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல்போனின் அடையாள எண்.
காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.

பிரகாஷ்:அறிஞர்களின் பொன்மொழிகள் ஒரே இடத்தில்

ஆயிரக்கணக்கான அறிஞர்களின் பொன்மொழிகளை ஒரே இடத்தில் பெற ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும்இந்த பொன்மொழிகள். பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திரமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள். நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும். கூகுள் சிறந்த தேடியந்திரமாக இருந்தாலும் அந்த மொன்மொழிகளை மட்டும் தனியே பிரித்து தேடுவது சிரமம். அந்த சிரமத்தை போக்க வந்துள்ளது ஒரு புதிய தேடியந்திரம். இந்த தேடியந்திரத்தில் சென்று அறிஞர்பெயரையோ, சரியான keyword கொடுத்தால் போதும் எண்டர் கூட அழுத்த வேண்டியதில்லை அறிஞர்களின் பொன்மொழிகள் மட்டும் உங்களுக்கு தனியே பிரித்து காட்டும். இந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வார்த்தை கொடுத்து தேடினால் போதும் உங்களுக்கு அடுத்த நொடியில் பொன்மொழிகள் வந்துவிடும். ஒவ்வொரு பொன்மொழிக்கு அருகிலும்அந்த பொன்மொழியை சொன்ன அறிஞரின் பெயரும் இருக்கும். இது போன்று ஆயிரக்கணக்கான அறிஞரின் பொன்மொழிகளை இந்த தேடியந்திரம் நமக்கு தருகிறது. இந்த தளத்திற்கு செல்ல www.quotecoil.com

பிரகாஷ்: Twitter Updates உங்கள் மொபைலில் இலவசமாக :

Twitter Updates உங்கள் மொபைலில் இலவசமாக :
இந்த செய்தி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். இருப்பினும் தெரியாத ஒருவர் இதனை வாசித்தால் பயனுள்ளதாக இருக்கலாம் என்கிற வகையில் இந்தப்பதிவினை எழுதுகிறேன். ஏனெனில் அனைவரும் அனைத்து நேரங்களிலும் Online ல் இருக்க முடியாதல்லவா.. அந்த சமயங்களில் தங்களின் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்கள் அல்லது பிரபலமானவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறியஇந்தப் பதிவு உதவலாம் என்ற நம்பிக்கையில் ..
*.முதலில் உங்கள் Twitter ல் Settings போய்க்கோங்க..
*.Settings ல Mobile போய்க்கோங்க..
*.அங்க உங்க மொபைல் நம்பர் கேக்கும்.
*.உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு அங்க இருக்குற கமெண்ட்ஸ் follow பண்ணி Twitter Updates உங்க மொபைல் activate பண்ணிக்குங்க..
*.அப்புறம் நீங்க யாரையெல்லாம் Follow பண்ணுறீங்களோ அல்லது யாரோட Updates மட்டும் உங்க மொபைல் இக்கு வந்தா போதும்னு நினைக்கிறீங்களோ அவுங்க மேல உங்க cursor வச்சு ஒரு Click பண்ணுங்க. இப்ப அவுங்க போட்டோ இல்லனா twitter Logo தெரியும். அங்க கீழ பார்த்திங்கன்னா பச்சை கலர்ல ஒரு டிக் அடிச்சு Following அப்படின்னு இருக்கும். அதுக்கு பக்கத்துல ஒரு Round போட்டு அதுக்குள்ளே மொபைல் மாதிரி போட்டிருப்பாங்க.. அத கிளிக் பன்னுநிங்கன்ன Updates are sent by sms to your mobile phone அப்படின்னு வரும்.இப்பலேர்ந்து நீங்க கிளிக் பண்ணுன நபர் எப்ப tweet பண்ணினாலும் உங்க மொபைல்க்கு 53000 அப்படிங்கிற நம்பர்ல இருந்து வந்திடும். இந்த மாதிரி நீங்க எதனை பேரோட tweet களையும் Activate பண்ணிக்கலாம். இது முற்றிலும் இலவசம்..!!
*.அவ்வளவு தாங்க. இனிமேல் உங்கள் நண்பர்கள் மற்றும் பிடித்த நட்சத்திரங்களின் Tweetகள் உங்கள் மொபைல்லையே தெரிஞ்சிக்கலாம்.
(பின்குறிப்பு : இந்த விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்து நான் உங்க நேரத்த வீணடிச்சிருந்தா மன்னிச்சிருங்க.

பிரகாஷ்: தமிழ்ப்பட வரலாறு

இந்தியாவில் திரைப்படம் :
தாமஸ் ஆல்வா எடிசன் " கினிடோஸ்கோப்" என்ற கருவியைக்கண்டுபிடித்ததின் மூலம் இன்று நாம் பார்க்கும் திரைப்படத்திருக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் பார்க்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த " லூமியர் சகோதரர்கள்" என்போர் 1895 இல் அறிமுகப்படுத்தினர். அவர்கள் எடுத்த ஒரு நிமிட திரைப்படங்களை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் திரையிட்டனர்.
*.இந்தியாவிற்கு வந்த முதல் திரைப்படம் ' இயேசுவின் வாழ்க்கையாகும் '. அது 1896 இல் பம்பாயில் திரையிடப்பட்டது.
*.இந்தியாவின் முதல் திரையரங்கான என்பில்ச்டன் கல்கத்தாவில் மதன் என்பவரால் 1907 இல் கட்டப்பட்டது.
*.இந்தியாவின் முதல் முழு நீளப்படம் ' ராஜா ஹரிச்சந்திரா ' .நீளம் 3700 அடி.
*.இந்தியாவில் தயாரான முதல் பேசும் படம் ' ஆலம் ஆரா '. 1931 மார்ச் 14 இல் திரையிடப்பட்டது.
*.தென்னிந்தியாவின் முதல் படம் ' கீசக வதம் ' 1916 இல் தயாரிக்கப்பட்டது .
*.தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ் ' .31.10.1931 இல் திரையிடப்பட்டது.
*.முதல் பேசும் படத்தை இயக்கியவர் 'H.M.ரெட்டி. T.P.ராஜலட்சுமி கதாநாயகி. இவர் 'மிஸ் கமலா ' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
*.1955 இல் வெளிவந்த ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' தமிழின் முதல் வண்ணப்படம்.
*.1948 இல் S.S.வாசன் 'சந்திரலேகா'என்ற படத்தை 609 பிரதிகள் எடுத்து உலகமெங்கும் திரையிட்டார்.அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அதிகபிரதிகள் எடுக்கப்பட்ட படம் இதுவே.
*.1954 இல் ' அந்த நாள் ' பாடல்களேஇல்லாத முதல் தமிழ்படம்.
*.தமிழ் திரைப்பட வரலாற்றில் மூன்று ஆண்டுகள் ஓடிய திரைப்படம் ஹரிதாஸ்.
*.தமிழ்நாட்டின் முதல் 70 MM திரையரங்கமான ஆனந்த் சென்னையில்G.உமாபதி என்பவரால் கட்டப்பட்டது.
*.முதல் சினிமாஸ்கோப் படம் ' ராஜா ராஜா சோழன்' .
*.1943 இல் அரிச்சந்திரா என்ற படத்தை A.V.M.செட்டியார் டப்பிங்செய்து தமிழின் முதல் டப்பிங் படத்திற்கு வழிவகுத்தார்.

புதன், 18 ஏப்ரல், 2012

பிரகாஷ்: ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்...

ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி..
இந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கிகொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்குசென்று கொண்டு இருக்கிறது என்றுஅறிய முடியும்.
இந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்தரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தைஅடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று நீங்கள்ட்ராக் செய்ய விரும்பும் ரயிலின் எண் அல்லது ரயிலின் பெயர் அல்லது குறிப்பிட்ட இரண்டு ரயில் நிலையங்களை குறிப்பிட்டால் போதும் அந்த ரயில் இருக்கும் இருப்பிடம், கடந்த இரு நிலையங்கள், அடுத்த இரு நிலையங்கள் போன்ற விவரங்களைபார்த்து கொள்ளலாம்.
இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் பீட்டா(சோதனை) நிலையில்தான் உள்ளதேஹு. ஆதலாம் சில பிழைகள் ஏற்ப்படலாம்.
இந்த தளத்திற்கு செல்ல - www.trainenquiry.com/searchtrain.aspx
டிஸ்கி- இந்த வசதி எப்பொழுது இருந்து நடைமுறையில் உள்ளது என தெரியவில்லை. என்னால் இப்பொழுதுதான் இந்த வசதியை பற்றி அறிய முடிந்தது. என்னை போல இந்த வசதியை பற்றி அறியாமல் இருந்தவர்களுக்காக இந்த பதிவு.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

பிரகாஷ்: தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செ...

தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும், இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள். தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள். நாம் நம் தளத்தில் நிறைய
விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக
காத்திருப்போம் ஆனால்
வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள்
பூத்துவிடும். ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20% கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம்.
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.
http://www.amulyam.in

பிரகாஷ்: மொபைல்களுக்கான மிக வேகமான பிரவுசர் UC Browser 8 இல...

மொபைல்களுக்கான மிக வேகமான பிரவுசர் UC Browser 8 இலவசமாக டவுன்லோட் செய்ய
மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும். இப்பொழுதுநாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும். உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
*. இணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.
*. Multi Tabs வசதி.
*. மிகச்சிறந்த தேடியந்திரம்
*. மிகச்சிறந்த டவுன்லோட் மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.
*. மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.
*. Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.
*. பிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
*. இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம்.
மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. மொபைல் மூலமாக டவுன்லோட் செய்ய - http://wap.ucweb.com/

பிரகாஷ்: தமிழில் தேடுபொறி இயந்திரம்

செந்தமிழில் இணைய வலையினை தேட,இந்த தேடல் இயந்திரம் பயன்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள்
*. செந்தமிழ் மற்றும் இயல்பு நடை தமிழில் இணைய வலை தேடலாம்.
*. சங்க கால இலக்கியங்கள் தேடலாம்.
*. தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளை வாசிக்கலாம்
*. நேரடி கிரிக்கெட் விளையாட்டு விவரங்கள்..
*. நேரடி கிரிக்கெட் ஆட்ட விவரங்களைத் தமிழில் காணலாம். (
*. குறுகிய மற்றும் விவரமான நிலவரங்களுடன் காணலாம்.
*. முக்கியமாக தமிழ் ஆங்கில அகராதி சேவை.
அ. தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் புரிந்துகொள்ள, தமிழ் ஆங்கிலஅகராதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆ. ஆங்கிலம்-தமிழ் அகராதி அமைத்து தமிழ் புரிந்து கொள்ளும் இணைய உலகத்தில், தமிழ்-ஆங்கில அகராதி மூலம் தமிழுக்கே பெருமை சேர்த்துள்ளது இந்த இணையம்.
மார்கழி மாத இசைத்திருவிழா விவரங்கள் இசைப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.அனைத்திற்கும் மேலாக இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ் எழுத்து பிழைத்திருத்தி இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கில தட்டச்சுப்பலகையிலிருந்து தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தட்டச்சுப் பலகை செயல் உண்மைப்பலகையாக (virtual)உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும் www.searchko.in

பிரகாஷ்: உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிற...

உங்கள் பேஸ்புக் கணக்கைவேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?
பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களைபிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்புவசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com-> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்குஅக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதிஇருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்துவிட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ் இல் பேஸ்புக் கணக்கைவேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

பிரகாஷ்: பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க!

பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க!
பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க autrorun.inf என்ற பெயரில் ஒரு போல்டர் ஒன்றினை உருவாக்கிக்கொள்ளுங்கள்.ஏனெனில் பென் ட்ரைவில் வரும் வைரஸ் பைல்கள் எல்லாம் autorun.inf பைலைஅடிப்படையாக வைத்தே வருவதால் அந்த பைலிற்க்கான பெயரில் ஒரு போல்டர் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
விண்டோஸ் ஐ பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கோப்பில் ஒரே பெயரில் ஒரு போல்டரையும், பைல்களையும் அனுமதிக்காது. எனவே autorun.inf என்ற பெயரில் ஒரு போல்டரை கிரியேட் செய்து கொள்ளுங்கள். இதன் படி autorun.inf பைல் உருவாகாது.
சின்ன விஷயம்,, ஆனா பெரிய பாதுகாப்பு
முயற்சித்து பருங்கள்

பிரகாஷ்: மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

பிரகாஷ்: மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனா...

இணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில்,யாகூ,ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம்நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய ஈமெயில் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்புவது எப்படி என பார்ப்போம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம், மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மெயில் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.http://
www.Anonymous.com .Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகி கீழே இருப்பதை போல இருக்கும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள்அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மெயில் அனுப்பி விடலாம்.
இந்த முறையில் அனுப்பப்படும் ஈமெயில்கள் உடனே சென்று சேராது. அதிகபட்சம் 12 மணி நேரம் கூட ஆகலாம்.
Note: இதன் மூலம் அனுப்பப்படும் மெயில்களில் உங்கள் ஈமெயில் ஐடியை தெரியாமல் மறைத்தாலும் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் சேமிக்கப்படும். ஆகவே விபரீதமாக எந்த மெயிலும் அனுப்ப வேண்டாம். தண்டனையில் மாட்டி கொள்வீர்கள்.

பிரகாஷ்: மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து

மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்….???
இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர் நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசே ஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல் கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல் கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்க ளைக் கம்ப்யூட்டருக்கு மாற்றி ப் பின் மீண்டும் பெற்று பயன் படுத்தக்கூடிய வசதி தரப்பட்டு ள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில் லை.
இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றி னை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை www.rseven.com என்ற முகவரியில் உள்ள இணை ய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதிய
வும்.
இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல் படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற் றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற் றில் மட்டுமே இதுசெயல் படுகிறது.
இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தள த்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படு த்தலாம் .
மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.
நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக ஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup) செய்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள் கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும் அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும் துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.mobyko.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம்மிடம் இருக்கும் மொபைல் போனினின் நிறுவனத்தையும் மாடலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து நம் மொபைலில் இருந்து Address book முதல் Photos , videos , Games என அனைத்தையும் எளிதாக தரவிலக்கலாம் ஆன்லைன் மூலம் சேமிப்பதால் ஒரு வசதி இருக்கிறது இண்டெர்நெர் இணைப்புஇருக்கும் அனைத்து இடத்திலும் நாம் தகவல்களை பார்க்கலாம். கூடவே நாம் மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க் தளங்களில் பகிர்ந்து கொள்ள வசதியும் இருக்கிறது.

பிரகாஷ்: உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா….?

கவனக் குறைவாகத் மொபைல் தொலைத்து விட்டீர்களா…?
இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமானஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.
இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.
இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.
இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-
பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்தஎண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல்போனின் அடையாள எண்.
காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.

பிரகாஷ்: மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய சிறந்த தளங்கள்!

் நமது மொபைலுக்கு ஆன்லைன் மூலமாக ரீ-சார்ஜ் செய்யஉதவும் மிகச்சிறந்த இணையதளங்களை இங்கே உங்களுக்காக பட்டியலிட்டுள்ளேன்.
+ rechargeitnow.com
ஹரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த இணையதளம். 24 மணி நேரமும் உடனடியாக நமது மொபைலுக்கு டெபிட்,அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏர்டெல்,ஏர்செல்,வோடபோன்,பி,எஸ்,ஏன்,எல் உட்பட அனைத்து மொபைல் நிறுவன இணைப்புகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
மொபைல் மட்டுமல்லாமல் டாடாஸ்கை,டிஷ்டிவி,பிக்டிவி,வீடியோகான் உள்ளிட்ட டி.டி.ஹச் இணைப்புகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மிகவும்,பாதுகாப்பான விரைவான சேவைகளை வழங்குவதால் இந்த இணையதளத்தை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.
பின்குறிப்பு : இங்கு உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்தினால்இலவச ரீசார்ஜ் உட்பட பல பரிசு சலுகைகளும் உண்டாம்.
+ http://www.fastrecharge.com
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 2007 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் ரீசார்ஜ் நிறுவனம் இது. ஏர்செல்,ஏர்டெல்,வோடபோன்,ரிலையன்ஸ்,டாடாஇண்டிகாம்,பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அனைத்து மொபைல் நிறுவன இணைப்புகளுக்கும்,வழக்கமான டி.டி.எச் இணைப்புகளுக்கும் நாம் இங்கே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் முகப்புப் பக்கம் இன்னும் மேம்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.
+ www.indianmobilerecharge.com
இதுவும் சென்னையை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான். ஏர்செல்,ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட பதினோரு மொபைல் நிறுவனஇணைப்புகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.டி.டி.எச் சேவையில் தற்போதைக்கு டாடாஸ்கை,டிஷ்டிவி ஆகியவற்றுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும், கூடுதல் வசதியாக இதன் முகப்புப் பக்கத்தின் பேருந்து பயணத்துக்கு டிக்கெட் பதிவு செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் பக்க வடிவமைப்பும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
+ www.onestoprecharge.com
'நூறு சதவீதம் திருப்தியான வாடிக்கையாளர்கள்' என்ற முத்திரையுடன் இயங்கி வரும் இந்த இணையதளம் கிட்டத்தட்ட எல்லா மொபைல் ஆப்பரேட்டகளின் ரீசார்ஜ் சேவைகளையும்,எல்லா டி.டி.எச் நிறுவனங்களின் ரீசார்ஜ் சேவைகளையும் வழங்கி வருகிறது.
விரைவில் விமான டிக்கெட் பதிவு செய்வது,போஸ்ட்பெய்டு பில்களுக்கு பணம் செலுத்துவது, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது போன்ற பிற வசதிகளையும் தர இருக்கிறார்கள்.
+ www.freecharge.in
'இந்தியாவின் நம்பர் ஒன் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் இணையதளம்' என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த இணையதளத்தில் ரீசார்ஜ் இலவசம். ஆமாம்,இந்த இணையத்தளத்தில் நீங்கள் பத்து ரூபாய் முதல் எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கிறீர்களோ அந்த பணத்தின் மதிப்புக்கு கொஞ்சம் அதிகமாகவே பிஸ்ஸாஹட்,குரோமா ரீடெயில்,ஷாப்பர்ஸ்ஷாப் போன்ற வணிக நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பனை தந்து விடுகிறார்கள்.
கூப்பன்கள் உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் முழுமையான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.கூப்பன் வேண்டுமென்றால் அதற்கு டெலிவரி கட்டணமாக ஒரு கூப்பனுக்கு பத்துரூபாய் வசூலிக்கிறார்கள்.முழுக்க முழுக்க மொபைல் போன்களுக்கு மட்டுமே இங்கே ரீசார்ஜ் செய்ய முடியும்.மிகவும் பாதுகாப்பான,விரைவான ரீசார்ஜ் சேவையை வழங்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகும்.
+ http://www.ezrecharge.in
குறைந்தது 25/- ரூபாய் முதல் இங்கே ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம்.எஸ்.எம்.எஸ் மூலம் ரீசார்ஜ் செய்வது,போன் மூலம் ரீசார்ஜ் செய்வது போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளும் இங்கு உண்டு.
+ https://www.justrechargeit.com
இதுவரை 63219 நபர்கள் பேஸ்புக்லைக் பட்டனில் சேர்ந்திருக்கிறார்கள்.கேஷ்கார்டு,டெபிட் கார்டு,கிரெடிட்கார்டு,முப்பதுக்கும் மேற்பட்ட வங்கிகளின் நேரடி வங்கி டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாகவும் இங்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.மிகவும் சிறப்பாக ரீசார்ஜ் செய்ய எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இணையதளம் இது.
+ http://www.anytimerecharge.com
freerecharge.in என்ற இணையதளத்தைப் போலவே இந்த இணையதளத்திலும் நாம் ரீ-சார்ஜ் செய்கின்ற பணத்தின் மதிப்புக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்க,தியேட்டரில் படம் பார்க்க,பேருந்து டிக்கெட்பதிவு செய்ய போன்ற அத்தியாவசியமான சேவைகளின் தள்ளுபடி கூப்பன்களை தருகிறார்கள்.
ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மொபைல் நிறுவனங்களின் ரீ-சார்ஜ் சேவைகள் தான் உள்ளன.ஏர்டெல், வீடியோகான், யுநிநார் போன்றவை இல்லை.
+ http://www.paytm.com
தொலைதொடர்பு நிறுவனங்களில் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கி வரும் one97 C ommunications நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த இணையதளத்துக்கு சென்னை தி.நகரில் கூட அலுவலகம் உண்டு.
மொபைல்,டி.டி.எச் என இரண்டு சேவைகளுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.வாரத்தின் ஏழு நாட்களிலும் நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம், ரீ-சார்ஜ் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும் என்று சத்தியம் செய்கிறார்கள்.